உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அயோத்தி ராமர் பா.ஜ.,வை காப்பாற்றுவாரா?

அயோத்தி ராமர் பா.ஜ.,வை காப்பாற்றுவாரா?

அயோத்தி: ஒரு பக்கம் யோகிக்கு பிரச்னை என்றால், இன்னொரு பக்கம் அயோத்தி ராமர் கோவில் உண்டியல் திருட்டு விவகாரம், பா.ஜ., தலைமைக்கும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.'அயோத்தியில் கோவில் கட்டுவோம்' என்கிற கோஷத்தை முன்வைத்து, ஆட்சியைப் பிடித்த பா.ஜ., இப்போது இதே விவகாரத்தில் சிக்கித் தவிக்கிறது.அயோத்தி ராமர் கோவிலை நிர்வகிப்பது, ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை. இதன் நிர்வாகிகள், உண்டியல் திருட்டு விஷயத்தில் சரியாகச் செயல்படவில்லை என்பதால், அனைவரும் பதவி விலகினர். இதையடுத்து, இந்த அறக்கட்டளை முறையாகச் செயல்பட வேண்டும் என, பிரதமர் மோடி விருப்பப்பட்டார். அத்துடன், ராணுவத்திலிருந்து ஒருவர், கோவிலின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும் எனவும் மோடி ஆசைப்பட்டாராம்.இதனால், நம் விமானப்படையின் ஓய்வுபெற்ற உயர் அதிகாரியான ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா, அறக்கட்டளையின் முதல் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். 5,500-க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களில் இருந்து இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அறக்கட்டளையின் பொதுச்செயலர், பொருளாளர் மற்றும் அறங்காவலர்கள் என, அனைவரும் புதிதாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இதனால், உண்டியல் திருட்டு விஷயத்தை மக்கள் மறந்துவிடுவர் என, பா.ஜ., தலைமை நினைக்கிறது. ஆனால், காங்., சமாஜ்வாதி என எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை முக்கிய தேர்தல் பிரசாரமாக்க திட்டமிட்டு உள்ளன. பா.ஜ., வெற்றிக்கு காரணமான அயோத்தி ராமர், தோல்விக்கும் வழிவகுப்பாரா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Sathyanarayanan Sathyasekaren
செப் 06, 2026 21:21

சுத்தமான இந்தியா மிக சிறப்பான திட்டம் ஆனால் அதற்காக மதிய அரசு கொடுத்த நிதி எங்கே சென்றது? மக்கள் தங்கள் கடமையை செய்கிறார்களா? முதலில் நீங்கள் செய்கிறீர்களா? உங்கள் நகராட்சிக்கு சென்று மத்திய அரசு கொடுக்கும் நிதி மற்றும் நீங்கள் கட்டிய வரி எங்கே எப்படி உபயோக படுகிறது என்று கேட்டுவிட்டு பிறகு பிஜேபி குறை சொல்லவும். மேலும் நீட் தேர்வு கொண்டுவந்தது கான் SCAM LOOTER CONGRESS. ஒன்னும் தெரியவில்லை என்றால் மூடிக்கொண்டு இருக்கவும். கொள்ளை அடிக்கும் கூட்டத்தை கேள்வி கேட்க வக்கில்லை.


Haja Kuthubdeen
செப் 06, 2026 18:20

காங்கிரஸ் இருக்க பிஜெபிக்கு பயமேன்...சமாஜ்வாதியை தோற்கடிக்கும் வேலய காங்கிரஸ் பார்த்துக்கும்.


ம பு மன்னார்சாமி
செப் 06, 2026 17:28

பாஜகவின் மிக பெரிய பலவீனமே, தான் ஆரம்பிக்கும் எந்த ஒரு பணியையும் தொடர்ச்சியாக கட்டுக் கோப்பாக கொண்டு செல்லும் பழக்கம் இல்லை. அது ஸ்வட்ச் பாரத் ஆகட்டும், நீட் தேர்வு நடத்துவதாக இருக்கட்டும், அல்லது ராமர் கோயில் நிர்வாக சீர்கேடு ஆகட்டும் மத்திய அரசின் hands offஆன செயல்பாடுதான் முக்கிய காரணம். ஆனால் எப்பவும் போல் வடக்கு, மேற்கு மற்றும் சமீபத்திய பெங்கால் வாக்காளர்கள் பாஜகவுக்கு கண்ணை மூடி ஓட்டு போட்டு விடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.


manian
செப் 06, 2026 16:54

Yes there was a fraud but they have found it took corrective steps.Yogi has eliminated mafias corruption and violence.UP sees tremendous industrial growth infra development and draws huge investments.People will vote for yogi again inspite of this one blemish.


N Srinivasan
செப் 06, 2026 14:33

வினாத்தாள் கசிவு சம்பத்தப்பட்ட போராட்டம் மூலமாக அரசியலுக்கு வந்தார் தர்மேந்திரா பிரதான். அதே சம்பத்தப்பட்ட போராட்டம் மூலமாக மந்திரி பதவி இழந்தார். இதை பார்க்கும்போது UP தேர்தலிலும் நடக்கலாம். ராமர் என்ன நினைக்கிறார் என்று பாப்போம். ஆனால் பிஜேபி மூன்றாவது முறை ஆட்சியில் மோடி உட்பட பல விஷயங்களில் கோட்டை குறட்டை விட்டுக்கொண்டுதான் இருக்கிறது.


ஆரூர் ரங்
செப் 06, 2026 15:16

1992 இடிப்பு நடந்த பின்னர் நடந்த உ.பி தேர்தலில் பிஜெபி வெல்லவில்லை. அப்போ ராமர் ஆசீர்வாதம் கிடைக்கவில்லையே. 2024ராமர் ஆலயம் எழுப்பப்படும் காலத்தில் மெஜாரிட்டியை விட குறைந்த சீட்கள்தான் கிடைத்தன. மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட வேண்டாமே.


Haja Kuthubdeen
செப் 06, 2026 18:23

ஜாதி மத அரசியல் மட்டுமே உபி ஆட்சியை தீர்மாணிக்கும்.இதில் சில ட்ரிக் இருக்கு...


chinnamanibalan
செப் 06, 2026 12:14

தகவல் கிடைத்தவுடன், களத்தில் இறங்கி, சம்பந்தப்பட்ட நபர்களை தட்டி தூக்கும் ஆட்சியாளர்களுக்கு ஆபத்து இருக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.


D Natarajan
செப் 06, 2026 11:57

ஒருவேளை பிஜேபி வரவில்லை என்றால் இந்தியாவின் நிலை என்னவாகும்


Haja Kuthubdeen
செப் 06, 2026 18:50

இந்தியா என்றுமே நிலைத்திருக்கும்.


ஆரூர் ரங்
செப் 06, 2026 08:36

தமிழகத்தின் அன்றாட நிகழ்வு.


அப்பாவி
செப் 06, 2026 06:33

உண்டியலயே காப்பாற்ற முடியல...


guna
செப் 06, 2026 06:55

வேளாவேளைக்கு உமக்கு தண்ட சோறு கிடைக்கும்போது, என்ன செய்ய அப்பாவி


SUBBU,MADURAI
செப் 06, 2026 07:44

அப்பாவி நீ கேலி கிண்டல் இல்லாமல் இரண்டு வரிக்கு மேல் ஒரு நாளைக்காவது உபயோகமான உருப்படியான ஒரு கருத்தையாவது போடு பார்ப்போம். நானும் நீ அப்புசாமியாக இருந்த காலத்தில் இருந்து உன்னை ஒரு ஏழெட்டு வருசமா திட்டிக்கிட்டுதான் இருக்கேன் அதுக்கே கூட நீ எனக்கு எந்த ரியாக்க்ஷனும் பண்ண மாட்டேங்கிற


சத்யநாராயணன்
செப் 06, 2026 11:56

இந்த அப்பாவிக்கு எந்த கருத்தும் பதிவு பண்ண தோன்றுவதில்லை; உண்மையான பிஜேபியினுடைய வாக்கு வங்கி....


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
செப் 06, 2026 14:39

ஆணிய பிடுங்க முடியல....


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ