உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஹசீனாவுக்கு தொடருமா இந்திய ஆதரவு?

ஹசீனாவுக்கு தொடருமா இந்திய ஆதரவு?

இந்தியா - வங்கதேசம் இடையே பல ஆண்டுகளாக நட்புறவு நீடித்து வருகிறது. அதன்படியே ஹசீனா தற்போது இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளனர். இருப்பினும், வங்கதேசத்தில் புதிய இடைக்கால அரசு அமைய உள்ள நிலையில், அவருக்கான ஆதரவு நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவ்வாறு அவருக்கு ஆதரவு அளிப்பதால், வங்கதேசத்தில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது. அதேசமயம், ஹசீனா இங்கு இருப்பதால், அவரின் ஆதரவாளர்களும் இந்தியாவுக்கு படையெடுக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. ஹசீனாவை ஆதரிப்பது வாயிலாக வங்கதேசத்தை ஒட்டியுள்ள வடகிழக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் கொந்தளிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=j8s9z00c&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த பிரச்னைகளை கருத்தில் வைத்து, வங்கதேசத்தில் அமையவுள்ள இடைக்கால அரசுடனான பேச்சை உறுதி செய்வதற்கும், நம் நாட்டின் உறவு குறிப்பிட்ட தலைவருடன் அல்ல, மக்களுடன்தான் உள்ளது என்பதை வலியுறுத்துவதற்கும் சரியான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. - நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஆக 08, 2024 12:59

ஹசீனாவுக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்தியாவின் ஆதரவு தொடர வாய்ப்பிருக்கிறது. ஆனால் இஸ்லாமியர்களின் வாக்கு எண்ணிக்கை அதிகம் கிடைக்கும் என்கிற கணக்கில் இண்டி கூட்டணியினர் ஆதரவு கிடைக்கும்.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ