உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பிரதமரின் மாபெரும் ஜவுளி பூங்கா விருதுநகரில் விரைவாக துவக்கப்படுமா!

பிரதமரின் மாபெரும் ஜவுளி பூங்கா விருதுநகரில் விரைவாக துவக்கப்படுமா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மத்திய அரசு ஒப்புதல் அளித்த நிலையில், விருதுநகரில் பிரதமரின் மாபெரும் ஜவுளி பூங்கா அமைக்கும் பணியை, 'சிப்காட்' நிறுவனம் விரைவில் துவக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் இ.குமாரலிங்கபுரத்தில், 'பி.எம்.மித்ரா' எனப்படும் பிரதமரின் மாபெரும் ஜவுளி பூங்காவை, 1052 ஏக்கரில், 1894 கோடி ரூபாயில் அமைக்க, தமிழக அரசுக்கு, மத்திய ஜவுளி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. தமிழக அரசு மற்றும் மத்திய அரசு இடையே, 2023 மார்ச்சில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பூங்கா உள்கட்டமைப்பு பணிகளுக்கு, மத்திய அரசு, 500 கோடி ரூபாய் மானியம் வழங்குகிறது. இப்பூங்கா வாயிலாக, 10,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கவும், ஒரு லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, 13 லட்சம் சதுர அடியில், 'பிளக் அண்ட் பிளே' எனப்படும், தயார்நிலை தொழிற்கூடம், 10,000 படுக்கைகளுடன் தங்குமிடம் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன. ஜவுளி பூங்கா அமைக்கும் பணியை, 'சிப்காட்' எனப்படும், தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனம் மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசிடம் இருந்து அனைத்து அனுமதிகளும் கிடைத்து விட்ட நிலையிலும், ஜவுளி பூங்கா அமைக்கும் பணிகள் துவக்கப்படவில்லை. அந்த பணிகள் விரைவாக துவக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு, தொழில் துறையினரிடம் எழுந்துள்ளது. இதுகுறித்து, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியன் கூறியதாவது: விருதுநகர் ஜவுளி பூங்காவை, தயார் நிலை தொழிற்கூடம், சூரியசக்தி மின்சாரம், மழைநீர் வடிகால், கழிவு நீர் சுத்திகரிப்பு, கழிவு பொருட்களை அகற்றுவது உள்ளிட்ட வசதிகளுடன், பசுமை பூங்காவாக அமைக்க வேண்டும். இந்தியா - பிரிட்டன் இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தால், தமிழகத்தில் உள்ள ஜவுளி நிறுவனங்களுக்கு அதிக 'ஆர்டர்'கள் கிடைக்கும். அதற்கு ஏற்ப, புதிய ஆலைகள் அமைக்க வசதியாக, விருதுநகர் ஜவுளி பூங்கா பணிகளை விரைவாக துவக்க வேண்டும். அங்கிருந்து துாத்துக்குடி துறைமுகம் வாயிலாக, ஏற்றுமதி செய்ய வசதியாக இருக்கும் என்றார். தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஜவுளி பூங்கா பணிகளுக்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணி முடிவடைந்து விட்டது. முதலில் உள்கட்டமைப்பு பணியை துவக்க, விரைவில், 'டெண்டர்' கோரப்பட உள்ளது. அடுத்து, தயார்நிலை தொழிற்கூடம், தங்குமிட வசதி என, ஒவ்வொரு பகுதியாக பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

venugopal s
ஆக 08, 2025 14:41

மொத்த திட்ட முதலீட்டில் ஐம்பது சதவீதம் மாநில அரசின் பங்களிப்பு. பேர் மட்டும் பிரதமர் திட்டம் என்று பெத்த பேர்!


guna
ஆக 08, 2025 15:17

ஓ திமுகவின் அப்பன் வீட்டு பணமா வேணு...


venugopal s
ஆக 08, 2025 17:34

இல்லை, பாஜகவின் அப்பன் வீட்டுப் பணம்!


vivek
ஆக 08, 2025 18:35

அட டாஸ்மாக்..மத்தவன் பணம் உமக்கு எதுக்கு... உழைச்சி செய்யுங்க..


Rajasekar Jayaraman
ஆக 08, 2025 22:24

குடிகாரக் கொத்தடிமை பொறம்போக்குகளுக்கு ஒன்றுமே தெரியாது 200 ரூபாய் தவிர.


Ganapathy
ஆக 09, 2025 01:36

திருந்தாத திராவிட சொம்பே, மொத்த செலவை திமுக தொளபதி அப்பன் தானே ஏற்கலாமே? ஏன் "தமிழ் மானத்தை வடபுலத்து ஆரியரிடம் அடகு வைத்து" காலில் விழுந்து கெஞ்சி மான்யம் வாங்கி இதை செய்யணும்? இந்த திராவிட களவாணி திமிர்வாதம் உடைக்கப்படும் விரைவில். திராவிட அப்பனுக்கு இப்படி ஒரு திராவிட அடிமை சொம்பு.


Ramalingam Shanmugam
ஆக 08, 2025 10:57

எய்ம்ஸ் வந்துடுச்சு சும்மா சொல்லி வைப்போமே


veeramani
ஆக 08, 2025 09:06

செட்டிநாட்டில் வசித்துவரும் மய்ய அரசின் ஓய்வுபெற்ற ஊழியரின் கருத்து விருதுநகர் மாவட்டம் அதிகமாக கரிசல் மண் பூமி. சில குதிகால் தவிர மற்ற ஏரியாக்கள் மழை மறைவு பிரதேசம். தண்ணீர் தட்டுப்பாடு உள்ள ஒன்று விருதுநகர் மாவட்டம். பருத்தியில் இருந்து பஞ்சு பிரிக்கும் முதல் நூல் செய்து சாயமேற்று வரை தண்ணீர் தேவை. இறுக்கம் தண்ணீர் கடின நீர் ஆகும் . இதில் கால்சியும் அதிகம் இருக்கிறது . எனவே தாமிரபரணி அல்லது பிளவக்கல் டாமில் இருந்து தண்ணீரை கொண்டு வருவதுதான் முதல் வேலை. பின்னர் தொழில் துவங்கினால் தொழில் வளர்ச்சி அடையலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை