உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மெகா பள்ளங்களுடன் காட்சியளிக்கும் மங்கலம்-வடமங்கலம் புறவழிச் சாலை

மெகா பள்ளங்களுடன் காட்சியளிக்கும் மங்கலம்-வடமங்கலம் புறவழிச் சாலை

புதுச்சேரி : கழிவு நீர் தேங்கி நிற்கும் மங்கலம் -வடமங்கலம் புறவழிச்சாலையை செம்மண் கொட்டி செப்பனிட வேண்டும். வில்லியனூர் அடுத்த சங்கராபரணி ஆற்று பாலத்தையொட்டியுள்ள மங்கலம்-வடமங்கலம் புறவழிச்சாலை அண்மையில் பெய்த கனமழையில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதில் ஏற்பட்டுள்ள மெகா பள்ளங்களில் கழிவு நீர் தேங்கி, கொசு உற்பத்தி ஜோராக நடந்து வருகிறது. இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுவது தொடர்கதையாகி வருகிறது. இங்கு இதுவரை 30க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளது. வடமங்கலத்திலிருந்து கால்வாய் வழியாக வெளியேறும் வீட்டு கழிவு நீர், கம்பெனிகளால் தடுத்து நிறுத்தப்படுவதால் தான் வடமங்கலம்-மங்கலம் சாலையில் கழிவு நீர் குட்டைபோல் தேங்கி நிற்கிறது. உயிரிழப்பு ஏற்படுவதற்குள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக செம்மண் கொட்டி சாலையை செப்பனிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி