உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிரிட்ஜெஸ் லேர்னிங் பள்ளியில் ஆசிரியர் தின கொண்டாட்டம்

பிரிட்ஜெஸ் லேர்னிங் பள்ளியில் ஆசிரியர் தின கொண்டாட்டம்

புதுச்சேரி: லாஸ்பேட்டை, அவ்வை நகர் பிரிட்ஜெஸ் லேர்னிங் வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தலைமை தாங்கிய பள்ளி தாளாளர் புவனா வாசுதேவன், ராதாகிருஷ்ணனின் வாழ்க்கை வரலாறு குறித்தும், அவரது வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்கள் குறித்தும் விளக்கி பேசினார். மாணவ மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. ஆசிரியர்களை போல, மாணவ மாணவிகள் பாடம் நடத்தும் புதுமையான போட்டியும் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து நடந்த வேடமணிதல் போட்டியில் மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். மாணவ, மாணவிகளுக்கு டாக்டர் புவனா வாசுதேவன் பரிசு வழங்கினார். பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் கவுரவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி