உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆரோசிட்டி அரிமா நடத்திய மத நல்லிணக்க பேரணி

ஆரோசிட்டி அரிமா நடத்திய மத நல்லிணக்க பேரணி

புதுச்சேரி : எம்.ஜெ.எப். புதுச்சேரி ஆரோசிட்டி அரிமா சங்கம் சார்பில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. புதுச்சேரி கடற்கரை சாலை, காந்தி சிலை அருகில் நடந்த விழாவிற்கு சங்கத் தலைவர் டேனியல் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மாணிக்கவாசகம், வட்டார தலைவர் ரங்காராவ் ஆகியோர் விழாவை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் காந்தி,நேத்தாஜி உள்ளிட்ட தேச தலைவர்களின் வேடம் அணிந்து வந்த பள்ளி மாணவர்களின் மத நல்லிணக்கம், மனித நேயத்தை வலியுறுத்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்தனர். வக்கீல் பரிமளம், நல்லாசிரியர்விஜயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி