உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விதை நெல் உற்பத்தியாளர் சங்க கூட்டம்

விதை நெல் உற்பத்தியாளர் சங்க கூட்டம்

புதுச்சேரி : வில்லியனூரில், சான்று நெல் விதை உற்பத்தியாளர்கள் நலச்சங்க பொதுக் குழு கூட்டம் நடந்தது. சங்கத் தலைவர் ராஜாராம் தலைமை தாங்கினார். பொது செயலாளர் ராமமூர்த்தி அறிக்கை வாசித்தார். கவுரவத் தலைவர் நாகமுத்து, துணைத் தலைவர் வேணுகோபால், பொருளாளர் பத்மநாபன், செயற்குழு உறுப்பினர்கள் ராமலு, சின்னத்தம்பி, ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாசிக் டெப்போக்களில் தேவையான உரம், விதை, பூச்சி மருந்துகளை இருப்பு வைக்க வேண்டும். சான்று நெல் விதை உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய விதை நெல் பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும். நெல் உற்பத்தியாளர் குழுக்களை மாநிலம் முழுவதும் உருவாக்க வேண்டும். உழவர் உதவியகங்களில் உள்ள டிராக்டர், அறுவடை இயந்திரம், நடவு இயந்திரம் உள்ளிட்டவற்றை நிர்வகிக்கும் பொறுப்புகளை ஆத்மா குழுக்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை