மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
4 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
4 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
7 hour(s) ago | 12
புதுச்சேரி:ஊழலை ஒழிக்க வலியுறுத்தி கம்யூ., கட்சிகள் சார்பில் நேற்று தர்ணா நடந்தது. ஊழலை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இடது சாரி கட்சிகள் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நேற்று நடந்தது. புதுச்சேரியில் தலைமை தபால் நிலையம் எதிரில் நடந்த தர்ணாவில் இந்திய கம்யூ., மா கம்யூ., கட்சியினர் கலந்து கொண்டனர்.போராட்டத்துக்கு நகர இந்திய கம்யூ., நகர செயலாளர் ஆனந்த், உழவர்கரை நகராட்சி மா கம்யூ., செயலாளர் லெனின்துரை தலைமை தாங்கினர். சீனிவாசன், அரியாங்குப்பம் பூபதி முன்னிலை வகித்தனர்.இந்திய கம்யூ., நாரா கலைநாதன் போராட்டத்தைத் துவக்கி வைத்தார். தேசியக் குழு உறுப்பினர் விஸ்வநாதன், மா கம்யூ., செயலாளர் பெருமாள் சிறப்புரையாற்றினர்.ஊழலை ஒழிக்க லோக்கபால் கொண்டு வர வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. சலீம், சேதுசெல்வம், சரளா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
4 hour(s) ago | 5
4 hour(s) ago | 1
7 hour(s) ago | 12