உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பைக் திருட்டு மர்ம நபருக்கு வலை

பைக் திருட்டு மர்ம நபருக்கு வலை

புதுச்சேரி : வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த ரூ. 1.6 லட்சம் மதிப்புள்ள பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கோரிமேடு பிரியதர்ஷினி நகரைச் சேர்ந்தவர் சாலமன் பிரவீன்குமார், 31; ஓட்டுநர் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். இவர் ரூ. 1.6 லட்சம் மதிப்புள்ள யமாகா எம்.டி.15 என்ற பைக் பயன்படுத்தி வந்தார். கடந்த 27 ம் தேதி மாலை தனது பைக்கை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது, வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த பைக் மாயமாகி இருந்தது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கோரிமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ