உள்ளூர் செய்திகள்

செடல் திருவிழா

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அடுத்த கோர்க்காடு கிராமத்தில் உள்ள எல்லையம்மன் கோவில் 76ம் ஆண்டு செடல் பிரமோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.இதையொட்டி தினமும் காலை 9.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபி ேஷகம் ஆராதனைகளும், இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. வரும் 2ம் தேதி மதியம் 12 மணிக்கு தேர் உற்சவமும், 1 மணிக்கு செடல் உற்சவம் நடக்கிறது. மூன்றாம் தேதி மஞ்சள் நீர் உற்சவமும், 4ம் தேதி இரவு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் வெங்கடேசன், துணைத் தலைவர் ஆறுமுகம், செயலாளர் ராஜா, பொருளாளர் முத்து, உறுப்பினர் ஏகாம்பரம் ஆகியோர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ