உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 1008 தாமரை மலர்களால் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு 

1008 தாமரை மலர்களால் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு 

பாகூர்: அக்ஷய திருதியை முன்னிட்டு, பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் உள்ள வேதாம்பிகை அம்மனுக்கு இன்று 1008 தாமரை மலர்களால் சிறப்பு அர்ச்சனை நடக்கிறது.பாகூரில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், அக்ஷய திருதியை, மற்றும் அக்னி நட்சத்திரத்தையொட்டி, தெற்கு திசை பார்த்து அருள்பாலித்து வரும் வேதாம்பிகையம்மனுக்கு இன்று 1008 தாமரை மலர்களால் சிறப்பு வழிபாடு நடக்கிறது. இதையொட்டி, மாலை 5.00 மணிக்கு பால், தயிர்,தேன், சந்தனம் உள்ளிட்டவற்றால் அம்மனுக்கு சிறப்பு அபி ேஷகம் நடக்கிறது. அதனை தொடர்ந்து, மாலை 6.00 மணிக்கு 1008 தாமரை மலர்களால் அர்ச்சனை செய்யப்பட்டு மகா தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அர்ச்சகர்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை