மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
6 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
6 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
6 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
6 hour(s) ago
புதுச்சேரி: புதுச்சேரியில், 10ம், வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளதாக, கல்வித்துறை அறிவித்துள்ளது.புதுச்சேரியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, கடந்த மார்ச் மாதம், 26, ம் தேதி துவங்கி, ஏப்.,8,ம் தேதி வரை நடந்தது. இதில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், 49 மையங்களில், பொதுத்தேர்வு நடந்தது.புதுச்சேரி பகுதியில், 84 அரசு பள்ளிகள், 23 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் 122 தனியார் பள்ளிகள் என, 229 பள்ளிகளை சேர்ந்த, 12 ஆயிரத்து 613 மாணவர்களும், 599 தனித்தேர்வர்களும் தேர்வு எழுதினர்.காரைக்கால் பகுதியில், 25 அரசு பள்ளிகள், 6 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், 29 தனியார் பள்ளிகள் என, மொத்தம் 60 பள்ளிகளை சேர்ந்த, 2 ஆயிரத்து 479 மாணவர்கள், 259 தனித்தேர்வர்கள் தேர்வு எழுதினர்.புதுச்சேரி, காரைக்காலில் மொத்தமாக, 289 பள்ளிகளை சேர்ந்த, 15 ஆயிரத்து 92 மாணவர்களும், 858 தனித்தேர்வர்களும், தேர்வு எழுதினர். தொடர்ந்து, விடைத்தாள் திருத்தும் பணி நடந்து முடிந்தது. தொடர்ந்து, இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உட்பட இதர பணிகளும் முடிக்கப்பட்டு விட்டன.இந்நிலையில், இன்று காலை 9:30 மணிக்கு, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago