உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 125 லிட்டர் சாராயம் பறிமுதல்

125 லிட்டர் சாராயம் பறிமுதல்

திருக்கனுார் : செல்லிப்பட்டு படுகையணையில் விற்பனைக்கு வைத்திருந்த 125 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் செல்லிப்பட்டு படுகையணை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது கேனில் வைத்து சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த நபர், போலீசாரை கண்டு, அங்கிருந்து தப்பி ஓடினார்.இதையடுத்து, போலீசார் அங்கு 4 கேன்களில் இருந்து 125 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து, கலால் துறையிடம் ஒப்படைத்தனர். ேலும், தப்பி ஓடிய நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை