உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கன்னியக்கோவிலில் 17ம் ஆண்டு லட்சதீப விழா

கன்னியக்கோவிலில் 17ம் ஆண்டு லட்சதீப விழா

பாகூர் கன்னியக்கோவில் சாந்த ஆஞ்சநேயர் கோவிலில், 17ம் ஆண்டு லட்ச தீப திருவிழா நேற்று நடந்தது.புதுச்சேரி - கடலுார் சாலை கன்னியக்கோவில் பச்சை வாழியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சாந்த ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று 17ம் ஆண்டு லட்சதீப திருவிழா நடந்தது. அதனையொட்டி, காலை 7.30 மணிக்கு சாந்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, காலை 10.30 மணிக்கு சீதா பிராட்டி சமேத ஸ்ரீராமச்சந்திரர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதனை தொடர்ந்து, மாலை, 6.00 மணிக்கு கோவில் வளாகம் முழுவதும் 10008 விளக்குகள் ஏற்றி லட்ச தீபவிழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர். இரவு சிறப்பு அலங்காரத்தில் சாந்த ஆஞ்சநேயர் வீதியுலா நடைபெற்றது.விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக குழு தலைவர் தனசேகரன், துணை தலைவர் ஜீவகணேஷ், செயலாளர் கலியபெருமாள், பொருளாளர் செந்தில்குமார், உறுப்பினர் கனகராஜ் மற்றும் நிர்வாகிகள், கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை