மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
18 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
18 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
18 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
18 hour(s) ago
புதுச்சேரி : புதுச்சேரியில் 2 பேரிடம் 89 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரியை சேர்ந்தவர் சத்யவன்குமார். இவரது மொபைல் எண்ணிற்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், வங்கியில் இருந்து பேசுவதாகவும், உங்களது பழைய டெபிட் கார்டு காலவதியாகி விட்டது. புதிய கார்டு வந்துள்ளது, அதற்கு பழைய கார்டின் விபரங்களை கேட்டார். விபரங்களை கொடுத்த பின், மொபைல் எண்ணிற்கு வந்த ஓ.டி.பி., எண்ணையும் கொடுத்தார். அடுத்த நிமிடத்தில், அவரது வங்கி கணக்கில் இருந்து 26 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது.அதேபோல், ராஜாராமன் என்பவரிடம் பேசிய நபர், வங்கியில் உங்களது காப்பீட்டு திட்டத்தை புதுப்பிக்க, வங்கி விபரங்கள், கிரெடிட் கார்டு விபரங்களை கேட்டு பெற்றார். பின், மொபைல் எண்ணிற்கு வந்த ஓ.டி.பி., எண்ணையும் கொடுத்து அடுத்த நிமிடத்தில், அவரது வங்கி கணக்கில் இருந்து 63 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது. இருவரும் அளித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago