உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மொபைல் போன்களை திருடிய 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது

மொபைல் போன்களை திருடிய 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது

திருக்கனுார்: திருக்கனுார் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்தவர் விஷ்வா, 20; பட்டதாரி. இவர் தனது தம்பியுடன் கடந்த 23ம் தேதி வீட்டில் துாங்கியுள்ளார். காலை எழுந்து பார்த்தபோது, வீட்டில் இருந்த ரூ. 40 ஆயிரம் மதிப்பிலான 2 விலை உயர்ந்த மொபைல் போன்கள் மர்ம நபர்களால் திருடப்பட்டிருந்தது.இதுகுறித்து விஷ்வா அளித்த புகாரின் பேரில், திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் பைக்கில் வந்து, விஷ்வா வீட்டில் இருந்த 2 மொபைல் போன்களை திருடி சென்றது தெரியவந்தது.இருவரையும் பிடித்து விசாரித்ததில் திருடிய 2 மொபைல் போன்களையும், மண்ணாடிப்பட்டைச் சேர்ந்த மனோபாலா, 23; என்பவரிடம் கொடுத்து வைத்திருப்பதாக தெரிவித்தனர்.தொடர்ந்து, மனோபாலாவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த இரண்டு மொபைல் போன்கள் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.பின்னர், கைது செய்யப்பட்ட 2 சிறுவர்கள் உட்பட 3 பேரையும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்திகாலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ