உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போதையில் ரகளை 4 பேர் கைது

போதையில் ரகளை 4 பேர் கைது

புதுச்சேரி: மது போதையில் பொது இடத்தில் தகராறு செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.ஒதியஞ்சாலை, சுப்பையா நகர் பகுதியில் 4 பேர் மது போதையில் பொதுமக்களிடம் தகராறு செய்து வருவதாக ஒதியஞ்சாலை போலீசாருக்கு தகவல் வந்தது. விரைந்து சென்ற போலீசார் தகராறில் ஈடுபட்ட 4 பேரை பிடித்து விசாரித்தனர்.அவர்கள் விழுப்புரம் மாவட்டம், மாம்பழம் பட்டு, அம்பேத்கர் சாலை நியூ காலனி பகுதியை சேர்ந்த கணேசன், 25; ராஜதுரை, 27; அன்பரசன், 26; விக்னேஷ்குமார்,26; என, தெரியவந்தது. 4 பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ