| ADDED : ஜூலை 05, 2024 05:05 AM
வானுார்: ஆரோவில் அருகே வழிப்பறி கொள்ளையில் ஈடுபட சதி திட்டம் தீட்டிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.வானுார் அடுத்த வாழப்பட்டாம்பாளையம் காலனியில் உள்ள லெதர் கம்பெனி அருகே சிலர் முகமூடி அணிந்து மறைந்திருப்பதாக ஆரோவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்றபோத, அங்கிருந்த 5 பேரும் தப்பியோட முயன்றனர்.அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் நாவற்குளம் எம்.ஜி.ஆர்., நகர் நடராஜன் மகன் உதயா (எ) உதயராஜ், 31; ஒத்தவாடை வீதி பாலு மகன் சிங்காரவேல், 35; காந்தி வீதி வெங்கடேசன் மகன் சண்முகம்,21; புதுச்சேரி கருவடிக்குப்பம் கெங்கையம்மன் கோவில் தெரு ஏழுமலை மகன் அருண்குமார்,21; மலையாளத்தான் மகன் கார்த்தி (எ) பாபா கார்த்தி, 30; என்பதும், இவர்கள், அவ்வழியே செல்வோரிடம் வழிப்பறியில் ஈடுபட தயாரானதும், இவர்களில் பாபா கார்த்தி, உதயா ஆகியோர் மீது கொலை வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது.இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து 5 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ஒரு பட்டாகத்தி, உருட்டுக்கட்டை, முகமூடிகளை பறிமுதல் செய்தனர்.