மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
16 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
16 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
16 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
16 hour(s) ago
புதுச்சேரி: சிறப்பு கூறு திட்டத்தில் இருந்து ஆதிராவிட மேம்பாட்டு கழகத்திற்கு 5 சதவீத நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என முதல்வர் ரங்கசாமியை அங்காளன் எம்.எல்.ஏ., நேரில் சந்தித்து மனு அளித்தார்.புதுச்சேரி மாநிலத்தில் அட்டவணை வகுப்பு மற்றும் பழங்குடி சமுதாயத்தில் படித்த இளைஞர்கள் பல ஆண்டுகளாக வேலைவாய்ப்ப இல்லாமல் உள்ளனர். அவர்கள் சுய தொழில் செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்கனில்லை.புதுச்சேரி அரசின் ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு கழகத்தில் தொழில் கடன்,மானியம் கடந்த 10 ஆண்டுகளாக அளிக்கவில்லை. இதனால் அட்டவணை வகுப்பு இளைஞர்கள் சுய வேலைவாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். மேலும் கல்வி கடனும் அளிக்கவில்லை. இதனால் ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு கழகம் சமுதாய மாணவர்களுக்கு எந்த விதத்திலும் கைகொடுக்கவில்லை.மேலும் இக்கழகத்தில், முத்ரா திட்டம், ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தில் ஜாமின் இன்றி கடன் அளிப்பதில்லை.உடனுக்குடன் கடனுதவி கிடைக்காமல் மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இக்கழகத்தில் ஊழியர்களுக்கு சம்பளம் மட்டுமே அளிக்கப்பட்டு வருகின்றது. கடன் மானியம் அளிக்க உரிய நிதியை அரசு ஒதுக்கீடு செய்யவில்லை.எனவே, சிறப்பு கூறு திட்டத்தில் இருந்து ஆதிராவிட மேம்பாட்டு கழகத்திற்கு 5 சதவீத நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். படித்த இளைஞர்கள் சுய வேலைவாய்ப்பு பெற்றிட 50 சதவீத மானியத்தில் கடன் அளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago