உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 50 லிட்டர் சாராயம் ஏனாமில் பறிமுதல்

50 லிட்டர் சாராயம் ஏனாமில் பறிமுதல்

புதுச்சேரி: ஏனாமில் 50 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.ஏனாம் ஐ.சி.ஏ., தொழிற்சாலை அருகே கோதாவரி ஆற்றுப் பகுதியில், சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, ஏனாம் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் அந்த பகுதியில் நேற்று சோதனை நடத்தினர்.அங்கு 50 லிட்டர் அளவில், ஒரு கேனில் சாராயம் இருந்ததை போலீசார் கண்டுப்பிடித்தனர். சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், கலால்துறையிடம் ஒப்படைத்தனர்.சாராயத்தை பதுக்கிய நபர்கள் பற்றிபோலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ