உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கிருமாம்பாக்கம் பெரிய ஏரியை புனரமைக்க ஒதுக்கிய ரூ.5.26 கோடி பாழ்

கிருமாம்பாக்கம் பெரிய ஏரியை புனரமைக்க ஒதுக்கிய ரூ.5.26 கோடி பாழ்

புதுச்சேரியில் சுற்று லாவை மேம்படுத்த ஏரிகள் புனரமைக்க திட்டமிடப்பட்டது. ஊசுட்டேரியை தொடர்ந்து கிருமாம்பாக்கம் பெரிய ஏரியை புனரமைக்க கடந்த காங்., ஆட்சியில், மத்திய அரசின் ரூர்பன் திட்டத்தின் கீழ் ரூ.5.26 கோடி மதிப்பில் சுற்றுலா தளமாக மாற்ற பணிகள் துவங்கியது.ஏரியை சுற்றிலும் சுமார் 3 கீ.மீ., துாரத்திற்கு பேவர் பிளாக்ஸ் கல்லினால் நடைபாதை, சுற்றுலா பயணிகள் ஓய்வு எடுக்கும் அறை, ரெஸ்டாரென்ட் என தனியாக கட்டடம் கட்டுப்பட்டது. மேற்கு கரை பகுதி யில் ஏரிக்கு வரும் வெளிநாட்டு பறவைகளை கண்டு ரசிக்க 6 இடங்களில் வாட்ச் டவர் எனப்படும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டது.பணிகள் அனைத்தும் முழுமையாக முடியாததால், இதுவரை திறப்பு விழா காணவில்லை. இதனால் குடிமகன்களின் கூடாராமாக கிருமம்பாக்கம் பெரிய ஏரி மாறிவிட்டது. பறவைகள் கண்காணிப்பு கோபுரங்கள் உடைந்து கிடக்கிறது. படகு தளத்தில் அமைக்கப்பட்டு இருந்த தளம் வெயில், மழையில் நனைந்து துருபிடித்து பாழடைந்து விட்டது.ஒட்டுமொத்தமாக ஏரியை புனரமைக்க அரசு ஒதுக்கிய ரூ. 5.26 கோடி பணத்தால் எந்தவித பயனும் ஏற்படாமல் பாழாகி உள்ளது. ஏரி முழுதும் பழையபடி வெங்காயத்தாமரை படர்ந்து, செடி கொடிகளுடன் புதர் மண்டி கிடக்கிறது. ஏரியை சரிசெய்து சுற்றுலா தளமாக மாற்ற ரூ.5 கோடியில் புனர மைக்க அதிகாரிகள் திட்ட மிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை