உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் 6 பேரிடம் ரூ. 42 லட்சம் மோசடி

புதுச்சேரியில் 6 பேரிடம் ரூ. 42 லட்சம் மோசடி

புதுச்சேரி: புதுச்சேரியில் 6 பேரிடம் நுாதன முறையில் 42.06 லட்சம் ரூபாய் மோசடி செய்த மர்ம கும்பலை சைபர் கிரைம் போலீசார் தேடிவருகின்றனர்.காரைக்காலை சேர்ந்தவர் சபரி கிரிராஜா. இவரிடம் மர்ம நபர் வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு, பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறினார். அதை நம்பி, அவர் 39.20 லட்சம் ரூபாயை தனது வங்கி கணக்கில் இருந்து அனுப்பினார். பின்னர் அந்த நபரை தொடர்பு கொள்ள முடியாமல் மர்ம நபரிடம் ஏமாந்தார்.முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் வாசுதேவன். இவரிடம் பங்கு சந்தையில் முதலீடு செய்தால், பணம் சம்பாதிக்கலாம் என மர்ம நபர் கூறியதை நம்பி, அவர் 90 ஆயிரம் ரூபாயை அனுப்பி ஏமாந்தார்.முதலியார்பேட்டையை சேர்ந்தவர் குபேரன், 1.96 லட்சம் ரூபாயும், அதே பகுதியை சேர்ந்த ரேவதி 46 ஆயிரம் ரூபாயும் அனுப்பி மர்ம நபர்களிடம் ஏமாந்துள்ளனர்.உருளையன்பேட்டையை சேர்ந்தவர் சாம்வேலுவிடம் மர்ம நபர் வங்கி அதிகாரி போல பேசினார். வங்கி விபரங்கள் கேட்டார். அதை கொடுத்து அடுத்த நிமிடத்தில், அவரது வங்கி கணக்கில் இருந்து 28 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டது.உப்பளம் பகுதியை சேர்ந்த சங்கரிடம் பேசிய நபர், பிரீ பையர் கேம் ஐடி இருப்பதாக கூறினார். அதை வாங்குவதற்கு, அவர் 26 ஆயிரம் அனுப்பி மர்ம நபரிடம் ஏமாந்தார். இதன் மூலம் 6 பேரிடம் மர்ம நபர்கள் 42.06 லட்சம் மொசடி செய்துள்ளனர்.இது குறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம கும்பலை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ