மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
5 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
5 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
5 hour(s) ago
புதுச்சேரி: புதுச்சேரி பழைய துறைமுக முகத்துவாரத்தில் நிறுத்தி வைத்திருந்த சுற்றுலா படகை மர்ம நபர்கள் தீயிட்டு எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி பழைய துறைமுக பகுதியில் சிலர் சுற்றுலா படகுகளை இயக்கி வருகின்றனர். இங்கு வம்பாக்கீரப்பாளையத்தைச் சேர்ந்த நிலவழகன், ரூ. 7 லட்சம் மதிப்பிலான சுற்றுலா படகு இயக்கி வந்தார். நேற்று முன்தினம் இரவு முகத்துவாரத்தில் தனது படகை நிறுத்தி இருந்தார்.நள்ளிரவு மர்ம நபர்கள் சுற்றுலா படகை தீயிட்டு எரித்தனர். நிலவழகன் அளித்த புகாரின்பேரில், ஒதியஞ்சாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், எதிர்கட்சி தலைவர் சிவா, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., ஆகியோர் சேதமான படகை பார்வையிட்டு படகு உரிமையாளருக்கு ஆறுதல் கூறியதுடன், அரசு மூலம் நிவாரணம் பெற்று தருவதாக உறுதி அளித்தனர். படகு தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் அறிந்து அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் சம்பவ இடத்திற்கு சென்று எரிக்கப்பட்ட படகை பார்வையிட்டு, படகு உரிமையாளருக்கு ஆறுதல் கூறினார். இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க., ராஜசேகர், வம்பாக்கீரப்பாளையம் பஞ்சாயத்து நிர்வாகிகள் சக்திவேல், செல்வம், பன்னீர், முருகன் உட்பட பலர் உடனிருந்தனர்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago