உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சென்டர் மீடியனில் கார் மோதி விபத்து

சென்டர் மீடியனில் கார் மோதி விபத்து

புதுச்சேரி: சென்டர் மீடியனில் கார் மோதி கவிழ்ந்த விபத்தில் ஒருவர் காயமடைந்தார்.மூலக்குளம் - வில்லியனுார் சாலையில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. சென்டர் மீடியனின் இடைவெளி உள்ளதால், வாகன விபத்துகள் நடந்து வருகிறது. இந்நிலையில், மூலக்குளம் அருகே நேற்று இரவு 9:30 மணிக்கு கார் (பி.ஒ.05 பி.0745) புதுச்சேரியில் இருந்து அரும்பார்த்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. தக்ககுட்டை அருகே சாலையில், இருந்த சென்டர் மீடியனில் கார் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. அதில் கார் டிரைவர் அரும்பார்த்துபுரம் செந்தில் படுகாயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்த வடக்கு போக்குவரத்து போலீசார் கவிழ்ந்து கிடந்த காரை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்தனர்.'சாலையில் வைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியன் முடியும் இடத்தில், ரிப்லெக்டர் இல்லாமல் இருந்ததால், இரவு நேரத்தில் வாகன ஓட்டிகளுக்கு சரியாக சென்டர் மீடியன் இருப்பது தெரியாததால், விபத்துகள் நடக்கிறது' என போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை