உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெண்ணை தாக்கிய வாலிபர் மீது வழக்கு

பெண்ணை தாக்கிய வாலிபர் மீது வழக்கு

நெட்டப்பாக்கம், : பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். நெட்டப்பாக்கம், அம்மாப்பேட்டையை சேர்ந்தவர் ரமேஷ், 35; தனியார் கம்பெனி ஊழியர். இவர் நெட்டப்பாக்கம் பகுதியில் கறவை லோன் வழங்குவதில் முறைகேடு நடப்பதாக சமூக வலைத்தளத்தில் பதவிட்டிருந்தார். இதனால் நெட்டப்பாக்கம், நேரு நகரைச் சேர்ந்த கிருத்திகா உட்பட 50 பேருக்கு கறவை மாடு லோன் வழங்காமல் மருத்துவ அதிகாரிகள் நிறுத்தினர். இதுகுறித்து நெட்டப்பாக்கம் நேரு நகர் பகுதியைச் சேர்ந்த கிருத்திகா, மீரா, சுதா, ராணி, கிருஷ்ணவேனி, கோமளா, லதா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பெண்கள் ரமேஷிடம் நியாயம் கேட்டனர். இதற்கு கிருத்திகா உள்ளிட்டவரை ரமேஷ் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். கிருத்திகா புகாரின் பேரில், ரமேஷ் மீது நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்தனர்.ஜாமின் பெற்ற ரமேஷ், மீண்டும் கிருத்திகாவிடம் தகராறு செய்து, கொலை மிரட்டல் விடுத்தார். மீண்டும் கிருத்திகா கொடுத்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதற்கிடையில் ரமேஷ் உடல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை முடிந்து வந்ததும் அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ