உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இளைஞரை தாக்கிய மூவர் மீது வழக்கு

இளைஞரை தாக்கிய மூவர் மீது வழக்கு

புதுச்சேரி : புதுச்சேரியில் இளைஞரை கற்களால் சராமாரிய தாக்கிய மூவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அரும்பார்த்தபுரம், பாரதியார் வீதியை சேர்ந்தவர் முரளி, பெயிண்டர். கடந்த, 25ம் தேதி வேலைக்கு சென்றுவிட்டு, மதியம் 2:00 மணிக்கு, வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். விழுப்புரம் பிரதான சாலை, வசந்தம் நகர் சந்திப்பில் சென்றபோது, அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் சிலர், அவரை வழி மறித்து கற்களால் சரமாரியாக தாக்கினர். அவரது தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.தகவலறிந்த முரளியின் உறவினர்கள் அவரை, கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக முரளி அங்கிருந்து, புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.போலீசார் விசாரணையில், முரளியை தாக்கிய மர்ம நபர்கள், ஆத்துவாய்க்கால் பேட்டை பகுதியை சேர்ந்த, விஷ்வா, ஜனா, சரத் என தெரிய வந்தது.இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை