உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஸ்ட்ரெச்சரில் வந்து ஓட்டளித்த கட்டட தொழிலாளி

ஸ்ட்ரெச்சரில் வந்து ஓட்டளித்த கட்டட தொழிலாளி

புதுச்சேரி, : மாகியில் ஸ்ட்ரெச்சரில் வந்து ஓட்டளித்தவரை தேர்தல் துறை அதிகாரிகள் பாராட்டினர்.புதுச்சேரியில் ஓட்டுச்சாவடிக்கு வர முடியாதவர்களுக்கு வாகன வசதியை தேர்தல் துறை ஏற்படுத்தி கொடுத்தது. அவர்களை வீட்டில் இருந்து ஓட்டுச்சாவடிக்கு அழைத்து வந்து மீண்டும் வீட்டிற்கு கொண்டு சென்றுவிட்டனர். 300க்கும் மேற்பட்டோர் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி ஓட்டளித்தனர்.மாகி பிராந்தியம் பல்லுாரை சேர்ந்த கட்டட தொழிலாளி பாபு, 55, நேற்று வீட்டில் இருந்து ஸ்ட்ரெச்சரில் படுத்த படுக்கையாக ஆம்புலன்ஸ் மூலம் கஸ்துாரிபாய் அரசு மேல்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடிக்கு அழைத்து வரப்பட்டு ஓட்டளித்தார். அவரை தேர்தல் அதிகாரிகள் பாராட்டினர். பாபு கூறுகையில், கட்டட வேலை செய்யும்போது கான்கிரீட் விழுந்து கால் எலும்பு உடைந்து ஆபரேஷன் நடந்து, படுத்த படுக்கையாக கிடந்தேன். தேர்தலில் ஓட்டளிக்க வாகன வசதி செய்து தருவதை அறிந்து கேட்டேன். தேர்தல் துறை உதவியால் என்னால் ஓட்டுபோட முடிந்தது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ