உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தாயை தொலைத்து தவித்த சிறுமி; கண்டுபிடித்து ஒப்படைத்த போலீஸ்

தாயை தொலைத்து தவித்த சிறுமி; கண்டுபிடித்து ஒப்படைத்த போலீஸ்

புதுச்சேரி : புதுச்சேரி கடற்கரையில் குடும்பத்தில் இருந்து பிரிந்து தனியாக தவித்த 6 வயது சிறுமியை, அவரது தாயை கண்டறிந்து போலீசார் ஒப்படைத்தனர்.புதுச்சேரி கடற்கரையில் நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு, 6 வயது சிறுமி தனது தாயை பிரிந்து தனியாக நின்று அழுது கொண்டிருந்தார். அவரை, பொதுமக்கள் அங்கு ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த பெரியக்கடை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.சிறுமியிடம் நடத்திய விசாரணையில், கடலுாரைச் சேர்ந்தவர் என்பதும், குடும்பத்துடன் கடற்கரை வந்ததாக தெரிவித்தார். தொலைபேசி எண்கள் ஏதும் தெரியவிக்கவில்லை.இதைத் தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார், பெரியக்கடை போலீஸ் நிலையத்தில் உள்ள அனைத்து போலீசாரையும் கடற்கரைக்கு அனுப்பி, சிறுமியின் பெற்றோரை கண்டறிய உத்தரவிட்டார்.போலீஸ் தேடலில் சிறுமியின் தாய் கடலுார் செரீனாபேகம் கண்டறியப்பட்டார். போலீஸ் நிலையம் வரவழைத்து உரிய விசாரணைக்கு பிறகு சிறுமியை அவரது தாயிடம் ஒப்படைத்தனர்.போலீசாருக்கு நன்றி தெரிவித்து சிறுமி மற்றும் அவரது தாய் புறப்பட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி