உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நடராஜர் கோவிலுக்கு புதிய குதிரை

நடராஜர் கோவிலுக்கு புதிய குதிரை

சிதம்பரம், : சிதம்பரம் நடராஜர் கோவில் அசுவ பூஜைக்காக பக்தர் சார்பில் புதிய குதிரை வழங்கப்பட்டது.சிதம்பரம் நடராஜர் கோவிலில், அசுவ பூஜைக்காக ஏற்கனவே ராஜா என்ற குதிரை இருந்தது. கடந்த மாதம் 21ம் தேதி அக்குதிரை உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தது. அதனைத் தொடர்ந்து, சென்னையை சேர்ந்த பக்தர் செல்வராஜி என்பவர், சிதம்பரம் நடராஜர் கோவில் அசுவ பூஜைக்காக, குதிரை வழங்கியுள்ளார்.புதுச்சேரி, மே 5-புதுச்சேரியில் உள்ள ஆதித்யா அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஐ.ஏ.எஸ்., அகாடமியை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்த விழாவில் ஆதித்யா கல்லுாரி நிறுவனர் ஆனந்தன், தாளாளர் அசோக் ஆனந்த், ஸ்ரீவித்யா அறக்கட்டளை டிரஸ்டி அனுதா பூனமல்லி தலைமை தாங்கினர்.சிறப்பு விருந்தினராக முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு, அகாடமியை துவக்கி வைத்து பேசுகையில், 'இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நீட், என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஜிப்மர், பட்டைய கணக்காளர் என, அனைத்து தேர்வுகளிலும் சாதித்து புதுச்சேரிக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். அடுத்தாக, ஐ.ஏ.எஸ்., தேர்விலும் மாணவர்கள் சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, இந்த அகாடமி துவக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது' என்றார். ஆதித்யா கல்லுாரியின் நிறுவனர் ஆனந்தன் பேசும்போது, 'கல்வி தான் மக்களை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும். எங்களின் கடின உழைப்பே எங்களை முன்னுக்கு கொண்டு வந்துள்ளது. பல மாணவர்களை சாதனையாளர்களாக ஆக்கியுள்ளது. இங்கு பயிலும் மாணவர்கள் ஐ.ஏ.எஸ்., தேர்விலும் வெற்றி பெற்று சாதிக்க வேண்டும்' என்றார்.தமிழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஜவகர், ஐ.ஏ.எஸ்., தேர்வின் சிறப்புகள், அத்தேர்வில் வெற்றி பெற செய்ய வேண்டியவை குறித்து கலந்துரையாடினார். அவர் பேசும்போது, 'ஐ.ஏ.எஸ்., என்பது அரசுக்கு ஆலோசனை வழங்குவது, மக்களுக்கான நலத்திட்டங்களை கொண்டு செல்லும் உயர்ந்த பணி. சமுதாயத்திற்கு உதவ வேண்டும் என்றால் இப்பணியை தேர்வு செய்யலாம்' என்றார். இந்திய பொது நிர்வாக நிறுவன புதுச்சேரி கிளைத் தலைவர் தனபால் வாழ்த்தி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்