உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காரைக்காலுக்கு தனி அருங்காட்சியகம்

காரைக்காலுக்கு தனி அருங்காட்சியகம்

புதுச்சேரி : அரிக்கமேட்டில் விளக்க வழிகாட்டுதல் மையம் ரோமன் சரக்கு கப்பல் மாதிரி வடிவில் அமைக்கப்படும் என, முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.பட்ஜெட்டில் கலை பண்பாட்டு துறை குறித்த முக்கிய அறிவிப்புகள்:பாரம்பரிய கலைகளான கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், நாதஸ்சுவரம், பறை ஆகியவற்றில் சிறந்து விளங்கும் கலைஞர்களை அடையாளம் கண்டு ஊக்கப்படுத்த தென்னக பண்பாட்டு மைய உதவியுடன் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.மத்திய அரசின் நிதியுதவிடன் கீழூர் நினைவு சின்னம் புனரமைக்கப்படும். இந்திய தொல்லியல் துறையினர் உதவியுடன் அரிக்கமேட்டில் ஒரு விளக்க வழிகாட்டுதல் மையம் ரோமன் சரக்கு கப்பல் மாதிரி வடிவில் அமைக்கப்படும்.இன்டாக் அமைப்பின் உதவியுடன் புதுச்சேரியில் உள்ள கலாசார கட்டடங்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். காரைக்கால் பிராந்தியத்திற்கென தனியாக அருங்காட்சியகம் காரைக்கால் பழைய நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்படும். புதுச்சேரி கலைமாமணி விருது வழங்குவதில் புகைப்பட கலையும், பேச்சுக்கலையும் சேர்க்கப்படும். பாரதியார், பாரதிதாசன் நினைவு அருங்காட்சியத்தில் ஒளி-ஒலி காட்சி அமைப்பு, ஒலிப்பதிவு, மாணவர்களுக்கான கலைந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.கவிஞர்களின் அனைத்து படைப்புகளும் தொகுக்கப்பட்டு மேம்படுத்தப்படும். புதுச்சேரி கலாசார கலைகளை மேம்படுத்த, கலைஞர்களை ஊக்குவிக்க புதுச்சேரிக்கான கலாசார கொள்கையை உருவாக்கப்படும்.புதுச்சேரியில் ஒளி-ஒலி நிகழ்ச்சி நடத்தவும், மாநில அளவிலான கலாசார விழா நடத்தவும் உத்தேசிக்கப்ப்டடள்ளது. கலை பண்பாட்டு துறைக்கு பட்ஜெட்டில் 32.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை