| ADDED : ஜூலை 09, 2024 04:48 AM
காரைக்கால்,: காரைக்கால் திருநள்ளாறு பேட்டை கிராமத்தை சேர்ந்த வீரபிரபு இவரது மனைவி ஜெயஸ்ரீ . இவரது மகன்கள் கிஷோர்,ஜெயசூர்யா. கிஷோர் திருநள்ளாறு அரசு நடுநிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.கடந்த 3ம் தேதி பள்ளி சென்று வீடு திரும்பிய கிஷோர், ஆசிரியர் தாக்கியதில் காதில் வலி ஏற்பட்டு ரத்தம் வந்துள்ளதை பெற்றோர்களிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர்கள் அரசு மருந்துவமனையில் கிஷோருக்கு சிகிச்சை பெற்று, பின் தனியார் மருந்துவமனையில் சேர்த்தனர். இங்கு மாணவரை பரிசோதித்த டாக்டர்கள் ஆசிரியர் தாக்கியதில் கிேஷார் கேட்பு திறன் இழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.இதில் ஆத்திரமடைந்த பெற்றோர் திருநள்ளாறு போலீசில் புகார் செய்தனர். அங்கு புகாரை ஏற்கவில்லை. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் கிஷோரின் பெற்றோர் கலெக்டர் மணிகண்டனை நேரில் சந்தித்து, மகனை தாக்கிய ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் புகார் மனு அளித்தார்.