மேலும் செய்திகள்
கலெக்டர் அலுவலகம் முற்றுகை காங்., நிர்வாகிகள் கைது
1 hour(s) ago
திருபுவனை: திருபுவனை அருகே மாத்திரைகள் தயாரிக்கும் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.திருபுவனை அடுத்த திருபுவனைபாளையத்தில் மருந்து, மாத்திரைகள் தயாரிக்கும் தனியார் கம்பெனி உள்ளது. நேற்று மாலை 3:30 மணியளவில் இந்த கம்பெனியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. காற்று வீசியதால், தீ மளமளவென பரவியது.தகவலின்பேரில் திருபுவனை, மடுகரை, திருக்கனுார், மற்றும் வில்லியனுார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நான்கு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, 6 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில், பல லட்சம் மதிப்புடைய மருந்து, மாத்திரைகள், மூலப்பொருட்கள் எரிந்து நாசமானது.
1 hour(s) ago