மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
2 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
2 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
2 hour(s) ago
புதுச்சேரி : புதுச்சேரியில், பாதாள சாக்கடை குழாய் உடைப்பால் 'திடீர்' பள்ளம் ஏற்பட்ட பகுதியில், அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆய்வு மேற்கொண்டார்.புதுச்சேரி, புஸ்ஸி வீதி - மிஷன் வீதி சந்திப்பு அருகே, சாலையில் 'திடீர்' பள்ளம் ஏற்பட்டது. இந்த நிலையில், அந்த இடத்தில் அமைச்சர் லட்சுமி நாராயணன், பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன், நேற்று காலை ஆய்வு செய்தார். அங்கு 'திடீர்' பள்ளம் ஏற்பட்டதற்கு, அந்த சாலையில் உள்ள பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்ட உடைப்பு தான் காரணம் என்று கண்டறியப்பட்டது.இந்த பாதாள சாக்கடை குழாய்கள் பதிக்கப்பட்டு 40 ஆண்டுகள் ஆகி விட்டன. அதனால் அமைச்சர் லட்சுமி நாராயணன், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் சேதம் அடைந்த பாதாள சாக்கடை குழாயை போர்க்கால அடிப்படையில் மாற்றுவதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மற்றும் என்.ஆர். காங்., நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago