உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கடலில் மூழ்கி வாலிபர் பலி

கடலில் மூழ்கி வாலிபர் பலி

புதுச்சேரி, : புதுச்சேரி கடற்கரை தலைமை செயலகம் எதிரே அடையாளம் தெரியாத வாலிபர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.புதுச்சேரி கடற்கரை தலைமை செயலகம் எதிரில் நேற்று மதியம் 1:00 மணிக்கு, நாயுடன் விளையாடி கொண்டிருந்த 25 வயது மதிக்க தக்க வாலிபர் திடீரென கடலுக்குள் இறங்கினார். அப்போது எழுந்த ராட்சத அலையில் சிக்கி வாலிபர் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டார்.அருகில் இருந்த பொதுமக்கள் கூச்சலிட்டனர். பெரியக்கடை போலீசார் அங்கு வருவதற்குள் இறந்த நிலையில் வாலிபர் உடல் கரை ஒதுங்கியது. இறந்த வாலிபர் யார் என, தெரியவில்லை. அவரது வலது கையில் ஏழுமலை என பச்சை குத்தப்பட்டுள்ளது. நெற்றியில் காயத்திற்கான வடு உள்ளது.இறந்த வாலிபர் குளிக்கும்போது கடலில் மூழ்கி இறந்தரா அல்லது தற்கொலை செய்து கொள்ள கடலில் இறங்கினாரா என்ற கோணத்தில் பெரியக்கடை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ