உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கொலை வழக்கில் ஜாமினில் வந்து தலைமறைவானவர் கைது

கொலை வழக்கில் ஜாமினில் வந்து தலைமறைவானவர் கைது

புதுச்சேரி: திருபுவனை வேலழகன் கொலை வழக்கில் ஜாமினில் வெளியே வந்து 4 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்தனர். திருபுவனை சின்னபேட் வேலழகன், 42; என்.ஆர்.காங். பிரமுகர். இவர் கடந்த 2017 ஏப். 19 ம் தேதி சன்னியாசிக்குப்பத்தில் கொலை செய்யப்பட்டார். திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதன்பிறகு கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றப்பட்டது. கார்த்திகேயன் (எ) ரமேஷ், 42; சிவராமன், செங்கதிரவன் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கில் கடந்த 2020ம் ஆண்டு ஜாமினில் வெளியே வந்த ரமேஷ் தலைமறைவானார். நீதிமன்ற வழக்கு விசாரணையிலும் ஆஜராகாமல் இருந்ததால் பிடிவராண்ட் பிறப்பிக்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த ரமேஷ், சென்னை கொளத்துாரில் தங்கி ஆட்டோ ஓட்டி வந்தது தெரியவந்தது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் ரமேசை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













சமீபத்திய செய்தி