மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
20 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
20 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
20 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
20 hour(s) ago
புதுச்சேரி : பரோலில் வந்து மாயமான ரவுடி கருணா, கோவையில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி முதலியார்பேட்டை அனிதா நகரைச் சேர்ந்தவர் ரவுடி கருணா (எ) மனோகரன். கொலை வழக்கில் கடந்த 1998ம் ஆண்டு முதல் காலாப்பட்டு சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த இவர், கடந்த 11ம் தேதி மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என பரோலில் வெளியே வந்து, 13ம் தேதி குடும்பத்துடன் தலைமறைவானார்.சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் அளித்த புகாரின்பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, கருணாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, 4 தனிப்படைகள் அமைத்து தேடிவந்தனர்.மேலும், கருணா தப்பிச் செல்ல உதவிய முதலியார்பேட்டை டி.எம். நகர் முருகன்,50; பூரணாங்குப்பம் ஞானமேடு, மாரியம்மன் கோவில் வீதி விஜயக்குமார், 47; ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.மேலும், கோவை உக்கிரபாளையத்தில் பதுங்கியிருந்த கருணாவை நேற்று முன்தினம் மாலை தனிப்படை போலீசார் கைது செய்து புதுச்சேரிக்கு அழைத்து வந்தனர்.
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago