உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால்  விபத்து

சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால்  விபத்து

புதுச்சேரி : சாலையில் திரியும் கால்நடைகளால் தினசரி விபத்து ஏற்படுகிறது.புதுச்சேரி நகர சாலைகள் வணிக நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு சுருங்கி விட்டது. அதிகரித்து வரும் வாகனங்களால் ஒவ்வொரு சாலையிலும் போக்குவரத்து நெரிசல் உச்சகட்டத்தில் உள்ளது. சாலையில் வாகனங்கள் செல்வதிற்கே இடம் இல்லாத நிலை உள்ளது.இந்நிலையில், 45 அடி சாலை குமரகுருபள்ளம் அருகே சாலையில் கால்நடைகள் நாள் முழுதும் சாலையில் படுத்து துாங்குவதும், சுற்றி திரிவதும் வாடிக்கையாக உள்ளது. வாகனங்கள் செல்லும்போது இடையூறாக சாலையின் குறுக்கே கடந்து செல்வதால் விபத்துக்கள் ஏற்படுகிறது. வாகனங்கள் கால்நடைகள் மீது மோதினால், அதன் உரிமையாளர்கள் வாகன ஓட்டிகளிடம் தகராறில் ஈடுபடுகின்றனர். எனவே, சாலையில் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை