| ADDED : ஏப் 30, 2024 05:12 AM
காரைக்கால்: காரைக்காலில் மதுமாரியம்மன் கோவில் திருவிழாவில் வெடிக்காத பட்டாசுகளை சேகரித்து பயன்படுத்த முயன்ற பொது அவை வெடித்ததால் 4 சிறுவர்கள் காயமடைந்தனர். காரைக்கால் மது மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவையொட்டி சுவாமி வீதியுலா நேற்று முன்தினம் நடந்தது. அப்போது ராயன்பாளையம் கூழ்குடித்த அக்ஹாரம் பகுதியை சேர்ந்த குணாலன்,27; வெடிக்காத பட்டாசுகளை கவன குறைவாக விட்டு சென்றார். இந்த வெடிக்காத பட்டாசுகளை, கோாட்டுச்சேரி திருவேட்டக்குடி மாரியம்மன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்த பாரதிதாசன் மகன், சாய்கணேஷ்,9: மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சாய் ஆருண்,மீரான்,சித்தார்த் ஆகிய நான்கு சிறுவர்களும், சேகரித்து பிளாஸ்டிக் பைப்பில் போட்டு இடிக்கும்போது வெடித்தது.இதில் 4 சிறுவர்களும் காயமடைந்தனர். பட்டாசு வெடித்து காயமடைந்த சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து காயமடைந்தவர்களை உடன் மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.தகவல் அறிந்த கோட்டுச்சேரி சப்.இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் போலீசார் கோவில் திருவிழாவில் கவனக்குறைவாக வெடிகளை சாலையில் வீசிசென்றதால் மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக குணாலன் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.