| ADDED : மே 15, 2024 01:14 AM
புதுச்சேரி, : முத்தரையர்பாளையம் முத்தரையர் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 89 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.பள்ளியளவில் மாணவி மோகனா 583 மதப்பெண் பெற்று முதலிடமும், மாணவர்கள் மாதேஷ், வம்சி, மாணவி அக் ஷய தர்ஷினி 557 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவி தர்ஷினி 552 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பெற்றனர்.500க்கு மேல் 24 பேரும், 400க்கு மேல் 54 பேரும் மதிப்பெண்கள் பெற்றனர். அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர்.பள்ளி முதல்வர் முத்துராமன் கூறுகையில், 'பள்ளியில் ஒவ்வொறு மாணவர் மீதும் தனி கவனம் செலுத்தி வருகிறோம். 10ம் வகுப்பு தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களையும் பிளஸ் 1 வகுப்பில் சேர்த்து, பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற வைக்கிறோம்' என்றார்.முன்னதாக பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்களுக்கும், வெற்றிக்கு காரணமான பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர் சங்க நிர்வாகிகள் கவுரவிக்கப்பட்டனர்.