உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 965 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் புதுச்சேரிக்கு கூடுதலாக ஒதுக்கீடு

965 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் புதுச்சேரிக்கு கூடுதலாக ஒதுக்கீடு

புதுச்சேரி : புதுச்சேரி மாவட்டத்திற்கு கூடுதலாக 965 மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.புதுச்சேரி லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவிற்காக கடந்த மாதம் 19ம் தேதி 965 மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள், 1090 வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை இயந்திரமான வி.வி.,பாட், புதுச்சேரி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.தற்போது லோக்சபா தேர்தலில், 26 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதனையடுத்து கூடுதலாக மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் சட்டசபை வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தின் மென்பொருள் கணினி மூலம் முதல் துணை தற்செயல் கலப்பு அடிப்படையில் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி நேற்று நடந்தது. மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் முன்னிலை வகித்தார்.வேட்பாளர்கள், முகவர்கள், அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாகி, ஏனாம் பிராந்தியங்கள் உள்ளடங்கிய 25 சட்டசபை அடங்கிய புதுச்சேரி மாவட்டத்திற்கு கூடுதலாக 965 மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி