| ADDED : ஏப் 16, 2024 06:19 AM
புதுச்சேரி, : புதுச்சேரி ஆதித்யா பள்ளி மாணவிகள் தேசிய அளவில் நடந்த 'இளம் விஞ்ஞானி' திட்டத்தில் தேர்வாகி சாதனை படைத்துள்ளனர்.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், விண்வெளி தொழில் நுட்பம் குறித்த அடிப்படை அறிவை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி மாணவர்களுக்கான 'இளம் விஞ்ஞானி திட்டம்' 'யுவ விஞ்ஞானி கார்யக்ரம்- யுவிகா' என்ற சிறப்பு திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.தேசிய அளவில் இளம் விஞ்ஞானி திட்டத்தில் பங்குபெற 350 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.இதில், புதுச்சேரி ஆதித்யா பள்ளியின் 10ம் வகுப்பு மாணவிகள் கார்மிகா, கார்னியா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு, திருவனந்தபுரம், விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் சென்று வரும் மே மாதம் 12ம் தேதி முதல் 25ம் தேதி வரை பயிற்சி பெறவுள்ளனர். .இதில் விண்வெளி அறிவியல் தொழில் நுட்பம், பொறியியல் கணித ஆய்வுகள் மற்றும் தொழில் முறை ஊக்கம் சார்ந்த விண்வெளி ஆராய்ச்சி பயிற்சிகளை அளிப்பதாகும்.இத்திட்டத்தில் தேர்வாகியுள்ள ஆதித்யா பள்ளி மாணவிகள் 8ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றதுடன், ஒலிம்பியாடு தேர்வு, அறிவியல் கண்காட்சி, தேசிய சேவை திட்டம், தேசிய மாணவர் படை, சாரணர் சாரணியர் இயக்கம் மற்றும் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று வெற்றி சான்றிதழ்கள் பெற்றுள்ளனர்.இந்திய தேசிய அளவில் இளம் விஞ்ஞானி திட்டத்தில் தேர்வாகியுள்ள மாணவிகளை ஆதித்யா பள்ளி நிறுவனர் ஆனந்தன், சால்வை அணிவித்து பாராட்டினார்.மேலும், பள்ளி தாளாளர் அசோக் ஆனந்த், வித்யநாராயணா அறக்கட்டளை டிரஸ்டி அனுதா பூனமல்லி மற்றும் பள்ளி முதல்வர், துணை முதல்வர், இயக்குனர்கள், பொறுப்பாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.