உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிள்ளைச்சாவடி சிறப்பு பள்ளியில் மாணவர் சேர்க்கை துவக்கம்

பிள்ளைச்சாவடி சிறப்பு பள்ளியில் மாணவர் சேர்க்கை துவக்கம்

புதுச்சேரி: சமூகநலத் துறையின் கீழ் இயங்கும் பிள்ளைச்சாவடி சிறப்பு பள்ளியில் மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.புதுச்சேரி சமூக நலத் துறையின் கீழ் பிள்ளைச்சாவடியில் ஆனந்தர ரங்கப்பிள்ளை சிறப்பு பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பத்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. 6 வயதிற்கு மேற்பட்ட புதுச்சேரி, தமிழ்நாடு பகுதியை சேர்ந்த காதுகேளாத, வாய்பேசாத, பார்வை திறன் குன்றிய மாணவர்கள் இப்பள்ளியில் சேர்ந்து படிக்கலாம். கட்டணம் ஏதும் இல்லை.இது குறித்து சமூக நலத் துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரியில் பொன் விழா கண்ட சிறப்பு பள்ளியாக ஆனந்தரங்கப்பிள்ளை சிறப்பு பள்ளி உள்ளது. 2022-23, 2023-24 ஆகிய கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் இப்பள்ளி தேர்ச்சி பெற்றுள்ளது. சிறப்பு பள்ளியில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு தமிழ்வழிக் கல்வி கற்பிக்கப்படுகிறது.பாடங்களுடன் ஓவியம், கலை, கை வேலை பயிற்சி அளிக்கப்படுகிறது. கணினி, தையல், தச்சு வேலை உள்ளிட்ட திறன்மேம்பாட்டு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. பள்ளி வளாகத்தில் மருத்துவ வசதி உள்ளது.பிரெய்லி புத்தகங்களுடன் ஹியரிங் எய்டு, சி.டி., பிளேயர், பிரெய்லி சிலேட், அபாகஸ், பிரெய்லி ஸ்டிக் உள்ளிட்ட செவித் துணை கருவிகள் உள்ளிட்ட உபகரணங்கள் வசதியும் உள்ளது. எனவே கற்றலுக்கான சிறந்த சூழல் உள்ளது. பள்ளியில் சேர 94422-79550, 0413-2655110 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ