உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அ.தி.மு.க., முகவர்கள் ஆலோசனை கூட்டம்

அ.தி.மு.க., முகவர்கள் ஆலோசனை கூட்டம்

புதுச்சேரி : அ.தி.மு.க., ஓட்டு எண்ணிக்கை மைய முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.புதுச்சேரி லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நாளை 4ம் தேதி, லாஸ்பேட்டை அரசு மகளிர் பொறியியல் கல்லுாரி மற்றும் மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது. இதில் பங்கேற்க உள்ள அ.தி.மு.க., முகவர்கள் ஆலோசனை கூட்டம் உப்பளம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கி, ஓட்டு எண்ணும் மையங்களில் முகவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என, ஆலோசனை வழங்கினார். ஓட்டு எண்ணும் மையத்திற்கு செல்லும் முகவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கினார். கூட்டத்தில் அவைத் தலைவர் அன்பானந்தம், பொருளாளர் ரவி பாண்டுரங்கன், துணை செயலாளர் நாகமணி, நகர செயலாளர் அன்பழகன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி