உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நிடி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்க அ.தி.மு.க., அன்பழகன் வலியுறுத்தல்

நிடி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்க அ.தி.மு.க., அன்பழகன் வலியுறுத்தல்

புதுச்சேரி : டில்லியில் நடக்கும் நிதி அயோக் கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்று, மாநில வளர்ச்சிக்கு தேவையான நிதியை பெற வேண்டும் என, அ.தி.மு.க., வலியுறுத்தி உள்ளது.அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் கூறியதாவது;பிரதமர் தலைமையில் வரும் 27ம் தேதி நிடி அயோக் கூட்டம் நடக்கிறது.அனைத்து மாநிலங்களும் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துதல், புதிய திட்டங்களை கொண்டு வரவும், மாநிலத்திற்கு தேவையான திட்டங்களுக்கு உரிய நிதி உதவி கோருதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் சம்பந்தமாக மாநில முதல்வர்கள் வரைவு திட்டங்களை தயாரித்து, வளர்ச்சி திட்டங்களை பூர்த்தி செய்ய இந்த கூட்டத்தை பயன்படுத்தி கொள்ளவர்.புதுச்சேரியில் கடந்த முதல்வரும், தற்போதுள்ள முதல்வரும் பல கால கட்டத்தில் நிடி அயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்தபல உள்கட்டமைப்பு வசதிகள் செய்ய திட்டமிட வேண்டும். புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம், காரைக்காலுக்குவிமான நிலையம், புதுச்சேரி - சென்னை இ.சி.ஆர்., வழியாக ரயில்பாதை, நகர பகுதியில் மேம்பாலங்கள், பஞ்சாலைகளை மீண்டும் இயங்க ரூ. 500 கோடி நிதி உள்ளிட்டவை கேட்டு பெற அரசு முனைப்பு காட்டவில்லை.மாநில தேவைகள், வசதிகளை மேம்படுத்துதல்குறித்து திட்ட வரையறை தயார் செய்து வரும் 27ம் தேதி, பிரதமர் தலைமையில் நடக்கும் நிடி அயோக் கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொள்ள வேண்டும்' என்றார்.பேட்டியின்போது, அவைத் தலைவர் அன்பானந்தம், அ.தி.மு.க., தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை