உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின் கட்டண உயர்வை கண்டித்து 16ல் அ.தி.மு.க., உண்ணாவிரதம்

மின் கட்டண உயர்வை கண்டித்து 16ல் அ.தி.மு.க., உண்ணாவிரதம்

புதுச்சேரி: புதுச்சேரி அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து வரும் 16ம் தேதி அ.தி.மு.க., சார்பில் உண்ணாவிதர போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி விடுத்துள்ள அறிக்கை:புதுச்சேரியில் என்.ஆர்.காங்.,-பா.ஜ., கூட்டணி அரசு, கடந்த ஜூன் மாதம் மின் கட்டணத்தை உயர்த்தியதை, அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததும், அரசு மின் கட்டண உயர்வை நிறுத்தி வைத்தது.இந்நிலையில் கடந்த 27 ம் தேதி மீண்டும் மின்கட்டண உயர்வை அறிவித்துள்ளது. அதுவும் கடந்த ஜூன் 16ம் தேதி முதல் கட்டண உயர்வை அமல்படுத்தியுள்ளது. இதனால், அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ள மின்கட்டண உயர்வை கண்டித்தும், கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி புதுச்சேரி மாநில அ.தி.மு.க., சார்பில் வரும் 16ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணிவரை பழைய பஸ் நிலையம் அண்ணா சிலை அருகில் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி