உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மருத்துவர்கள் போராட்டம் தீர்வுகாண அ.தி.மு.க., தீர்மானம்

மருத்துவர்கள் போராட்டம் தீர்வுகாண அ.தி.மு.க., தீர்மானம்

புதுச்சேரி : அ.தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து விளக்க கூட்டம், உப்பளம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். அவை தலைவர் அன்பானந்தம், மாநில ஜெ பேரவை செயலாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், 4 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள மருத்துவ பாது காப்பு சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். பெண் டாக்டர் கொலை வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிப்பதால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் ஜிப்மர் உள்ளிட்ட அரசு மருத்துவ மனையில் போராட்டம் நடத்தும் மருத்துவ பிரதி நிதிகளை முதல்வர் அழைத்து பேசி போராட்டத்தை கைவிட செய்ய வேண்டும்.இளநிலை மருத்துவ படிப்பில் தனியார் மருத்துவ கல்லுாரிகளிடம் 50 சதவீத இடங்களை பெற நடவடிக்கை எடுக்காததை கண்டிப்பது. இந்த விஷயத்தில் கவர்னர் நேரடியாக தலையிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில், மாநில துணை தலைவர் ராஜாராம், முன்னாள் எம்.எல்.ஏ., கோமளா, இணை செயலாளர்கள் வீரம்மாள், கணேசன், திருநாவுக்கரசு உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி