உள்ளூர் செய்திகள்

ஆலோசனை கூட்டம்

அரியாங்குப்பம்: வீராம்பட்டினம் மீனவ கிராம பஞ்சாயத்தார்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது.அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினம் மீனவ கிராம பஞ்சாயத்தார்களின் ஆலோசனை கூட்டம், செங்கழுநீர் அம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது. பஞ்சாயத்து நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.வீராம்பட்டினம் பகுதிக்கு அதிகமானோர் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மேலும், அங்குள்ள செங்கழுநீர் அம்மன் கோவிலுக்கு, புதுச்சேரி மற்றும் தமிழக பகுதியில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் தரிசிக்க வருகின்றனர். அவர்கள் பாதுகாப்பாக வந்து செல்ல கிராம மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை எடுத்து வரும் சந்தேகப்படியாக நபர்களை பற்றி போலீசாரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை