உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முள்ளோடை வாய்க்காலில் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு

முள்ளோடை வாய்க்காலில் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு

பாகூர்: முள்ளோடை வாய்க்காலில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளை அப்புறப்படுத்தி, துார்வாரிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாகூர் அருகே உள்ள மணப்பட்டு ஏரி, காட்டுக்குப்பம் தாங்கலில் இருந்து முள்ளோடை வழியாக பெரிய வாய்க்கால் சென்று பின் கடலில் கலக்கிறது. பாகூர், கன்னியக்கோவில், காட்டுக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மழை, வெள்ள நீரை வெளியேற்றுவதில் இந்த வாய்க்கால் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த வாய்க்கால் பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளதால், தற்போது ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளது. இதனால், மழை காலங்களில் தண்ணீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டு, வயல்வெளி மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகும் நிலை உள்ளது.சிறிய வாயக்காலில் வரும் நீரை உள்வாங்கி அதனை கடலில் கொண்டு சென்று சேர்க்கிறது. இதனால், ஆண்டு முழுவதும் இந்த வாயக்காலில் நீரோட்டம் இருந்து கொண்டே இருக்கும். ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளதால் மழை நீரையும் சேமிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, மழை காலத்திற்கு முன்பாக, முள்ளோடை வாய்க்காலை துார்வாரிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ