மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
4 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
4 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
5 hour(s) ago
புதுச்சேரி : நெல் மற்றும் காய்கறி சாகுபடி செய்த 5,167 காரைக்கால் விவசாயிகளுக்கு உற்பத்தி ஊக்கத்தொகை ரூ. 5.23 கோடி ஓரிரு நாட்களில் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என, வேளாண் துறை அறிவித்துள்ளது. வேளாண் துறை அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு;புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் பயிர் உற்பத்தி திட்டத்தின் மூலம் நெல் சாகுபடி, இயற்கை முறையில் நெல் சாகுபடி, காய்கறி பயிர் சாகுபடி, கரும்பு மற்றும் தீவன புல் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கு உற்பத்தி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 2023-24ம் ஆண்டு சம்பா, தாளடி பருவத்தில் நெல் சாகுபடி செய்த 4,374 பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு ஊக்கதொகையாக ஒரு ஏக்கருக்கு ரூ.5,000 வீதம் மொத்தம் 4 கோடியே 57 லட்சத்து 32 ஆயிரத்து 400 ரூபாய், அட்டவணை பிரிவை சேர்ந்த 692 விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 6,000 வீதம் மொத்தம் 53 லட்சத்து 94 ஆயிரத்து 537 ரூபாய் நவரை பருவத்தில் நெல் சாகுபடி செய்த 26 விசாயிகளுக்கு ஏக்கருக்கு 5000 வீதம் 1 கோடியே 80 லட்சத்து 800 ரூபாய் வழங்கப்பட உள்ளது.இயற்கை முறையில் நெல் சாகுபடி செய்த 58 விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 8,000 வீதம் மொத்தம் 9 லட்சத்து 8 ஆயிரத்து 160 ரூபாய், கரும்பு சாகுபடி செய்த 4 விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 10,000 வீதம் மொத்தம் 43 ஆயிரம் ரூபாய், தீவன புல் சாகுபடி செய்த 2 விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 8,000 வீதம், 38 ஆயிரத்து 320 ரூபாய், காய்கறி சாகுபடி செய்த 11 விவசாயிகளுக்கு 34 ஆயிரத்து 200 ரூபாய் என, மொத்தம் 5167 விவசாயிகளுக்கு, 5 கோடியே 23 லட்சத்து 31 ஆயிரத்து 417 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இத்தொகை ஓரிரு நாட்களில் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 hour(s) ago
4 hour(s) ago
5 hour(s) ago