| ADDED : ஏப் 10, 2024 01:54 AM
புதுச்சேரி : புதிய பஸ் நிலையத்தில் குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என, புதுச்சேரி ஏ.ஐ.யு.டி.யு.சி., தொழிற்சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.தொழிற்சங்கத்தின் தலைவர் சங்கரன், செயலாளர் சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரி புதிய பஸ் நிலையத்திற்கு, தினசரி பல்லாயிரக்கணக்கான பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். அங்கு கடந்த பல மாதங்களாக 'ஸ்மார்ட்' சிட்டி திட்டத்தின் கீழ் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. அதனால், பஸ்கள் முறையாக நிறுத்தப்படாமல் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.இது ஒருபுறம் இருக்க, கொளுத்தும் வெயிலில் பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய குடிநீர் வசதி எதுவும் செய்யப்படவில்லை. இதனால், பொதுமக்களும், பயணிகளும், வியாபாரிகளும் குடிநீர் இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.புதுச்சேரியில் மதுபான கடைகளை அளவுக்கு அதிகமாக திறந்து வைத்துள்ள அரசு, பஸ் நிலையத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யாததை, ஏ.ஐ.யு.டி.யு.சி., தொழிற்சங்கம் வன்மையாககண்டிக்கிறது.அங்கு பொதுமக்கள் அனைவரும் பயன் பெறும் வகையில் குடிநீர் தேவையை உடனடியாக பூர்த்தி செய்ய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.